• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ.,ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச் சாலை பிரிவில் நீதிமன்றம் தொடங்கி சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கி வரை உள்ள நகர்ப்புற சாலை யின்நடுவில் உள்ள தடுப்புகள் அல்லது சாலையின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளம், முகநூல்,புலனங்களில் மற்றும்கருப்பையா எம்.எல்.ஏ.,வுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து தகவலறிந்த கருப்பையா எம்.எல்.ஏ., வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் ஆய்வு பணி செய்தார்.அப்போது நெடுஞ்சாலை உதவி பொறியாளர் கௌதம்குமார் 4 வழிச்சாலையில் மட்டும் தான் சாலை நடுவில் உள்ள தடுப்புகள் இல்லை மின்விளக்கு அமைக்கப்படும் என்றும் இது விடுபட்ட நகர்புறச் சாலை என்பதால் இதன் ஓரங்களில் பேரூராட்சி நிர்வாகம் தான் மின் விளக்கு அமைக் க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார்.

அதன் பின் பேரூராட்சி செயல் அலுவலர் வாழவந்தானிடம் தொடர்பு கொண்டு கருப்பையா எம்.எல்.ஏ., பேசியதை தொடர்ந்து அவர்உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது வழக்கறிஞர் தியாகராஜன், மதுசூதனன், ஹரி ஆகியோர் உடன் இருந்தனர்.