• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு..,

BySeenu

May 30, 2026

கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச்சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத்தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார்.அப்போது,அங்கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர் வருகிறார் என்றதும் மருத்துவமனை தூய்மையாக வைக்கப்பட்டு உள்ளது.மேலும், அனைவரும் சுறுசுறுப்பாக பணிபுரிகின்றனர் என புகார் அளித்தனர்.அப்போது, அவர் இனி யாரிடமும் கூறாமல் திடீர் ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் திடீரென ஆய்வு செய்தார்.அப்போது,அங்கு பணியில் இருப்பவர்களின் விவரங்கள்,அனைவரும் சரியாக பணிக்கு வந்துள்ளனரா? பராமரிப்பு பணிகள்,கேண்டின் உணவுப்பொருட்கள் உள்ளிட்டவை குறித்து அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

இதற்கு முந்தைய ஆய்வின் போது அமைச்சர் சம்பத்குமார் கூறியபடி திடீரென சீக்ரெட் ஆய்வை நள்ளிரவில் நடத்தியது அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.