திருப்பரங்குன்றம் காவல் நிலையம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் கோயில் பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என இவை அனைத்திற்கும் அருகிலேயே மூன்று டாஸ்மார்க் மதுபான கடைகள் இயங்கி வந்தன.

வழிபாட்டுத்தலங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக அரசு அந்த உத்தரவின் படி இங்கிருந்து மூன்று அரசு மதுபான கடைகள் மட்டும் மூடப்பட்டன. ஆனால் 5556 எண் கொண்ட டாஸ்மார்க் கடை மீண்டும் திறக்கப்பட்டு தற்போது இரண்டு நாட்களாக செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து டாஸ்மார்க் ஊழியர்களிடம் கேட்ட போது இந்தக் கடையை மூடுவதற்கான ஆணை வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். பொதுமக்களோ மற்ற இரண்டு கடைகள் மூடப்பட்டுள்ளது. அந்த டாஸ்மாக் போன்று தான் இந்தக் கடைக்கும் பள்ளிக்கூடம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, இரயில் நிலையம், கோயில் எல்லாம் அருகே உள்ளது அதுவும் 50 மீட்டருக்குள் உள்ளது. ஆகையால் இந்த கடையையும் அடைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் வைத்து உள்ளார்கள் மேலும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீ ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் இந்த டாஸ்மாக்கை கடந்து தான் சென்று வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் டாஸ்மாக்கை கடக்கும்போது மாணவிகள் முகத்தை சுளித்துக்கொண்டே கடந்து செல்கின்றனர். குடிமகன்கள் பாருக்குள் சென்று குடிக்காமல் வெளியில் நின்று குடித்துக்கொண்டு தங்கள் இஷ்டம் போல் பேசி வருகிறார்கள்.எனவே இந்த கடையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்

இந்த கடையில் முன்னாள் அதிமுக பிரமுகர் செல்வம் என்பவர் பார் உரிமம் பெற்றுள்ளார். இவர் அதிமுகவில் இருந்து விலகி தற்போது த வெ.காவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் நிர்மல் குமாரின் தொகுதி என்பதால் அமைச்சர் இதனை உடனடியாக கவனத்தில் எடுத்து இக்கடையை அகற்ற நடவக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



