• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அகரன் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி பை வழங்குதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி..,

ByP.Thangapandi

May 28, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகரன் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி பை வழங்குதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.,

இதில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கையை மாற்றும் சக்தி.,

அறிவு, திறன், நம்பிக்கை ஆகியவற்றை வழங்கும் கல்வி, பின்தங்கிய சமூகத்திற்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கவும் அகரன் அறக்கட்டளை நடத்தும் பள்ளி பை வழங்கும் நிகழ்ச்சி, கல்வி பயணத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறிய ஆனால் முக்கியமான படியாகும்.

கல்வியே எதிர்காலம் – ஒவ்வொரு பையிலும் ஒரு புதிய நம்பிக்கை என்ற அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெற்றது.,

இதில் அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குமரேசன் தலைமையில், உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளி
தலைமை ஆசிரியை அமுதப் பிரியா முன்னிலையில் உசிலம்பட்டி அகரன் அறக்கட்டளை ( AGARAN TRUST ) நிறுவனர் கஜலெட்சுமி கணேஷ்குமார் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சித்தர்மலை, ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் சுப்ரமணி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.,