• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி தமிழ்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும்-நிர்மல்குமார்..,

ByP.Thangapandi

May 27, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்த சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணபதியம்மாள் மற்றும் சூலப்புரத்தைச் சேர்ந்த ராமுத்தாய், தனிக்கொடி என்ற மூன்று பெண்களின் வீடுகளுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் திரு உருவபடங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்.,

நேற்று உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 4 பேர் மீது மின்னல் தாக்கியது, அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கு முதல்வர் உத்தரவின் பேரில் தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளோம், சிகிச்சை பெற்று வருபவரையும் நேரில் சந்தித்தேன், அவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார், முதல்வரும் நேற்றே இது குறித்து கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்ய சொல்லியிருந்தார்.,

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கோரிக்கைகளை வைத்தனர், அது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும், படித்த இளைஞர்களுக்கு தேவையான தகுதி அடிப்படையில் என்ன அரசு பணி வழங்க முடியுமோ அதை செய்வோம்., ஒரு சிலர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக சொன்னார்கள் அவர்களுக்கு வேறு என்ன உதவிகளை செய்ய முடியுமோ அதை செய்வோம்.,

இன்று டெல்லி சென்றுள்ள முதல்வர் வைத்த 4 கோரிக்கைகளில் முக்கியமாக தமிழ்தாய் வாழ்த்து, ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முதலாவதாக தமிழ்தாய் வாழ்த்தை பாடாமல் வந்தே மாதரம் பாடுகின்றனர், அது கண்டனத்திற்குரியது., மற்ற மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் மாற்றி பாடினார்கள், அவர்களுக்கு எங்கெல்லாம் அரசியல் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் செய்கிறார்கள், தமிழகத்திலும் அது நடக்கும் கவனர் மாளிகையாக இருந்தாலும் சரி, கவனர் உட்பட்ட நிகழ்வாக இருந்தாலும் சரி தமிழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும், அதை பிரதமரும் செவி சாய்த்து, ஒன்றிய அரசும் மாற்றுவார்கள்., வந்தே மாதரத்தை கடைசியாக கூட பாடிக் கொள்ளட்டும் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.,

டெல்லிக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் செல்லவில்லை என்பது அவர் பணி சார்ந்தது, தமிழகத்தின் கோரிக்கை சார்ந்து முதல்வர் சென்றிருக்கிறார் அதனால் வேறு யாரும் செல்லவில்லை.,

மேதாது அணையை கட்ட விடாது சட்ட பூர்வமான தகவல்கள் ஆராய்ந்து முதல்வர் உத்தரவிடுவார்., மற்றபடி அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.,

எங்கெல்லாம் ஒன்றிய அரசு தங்களது அதிகாரத்தை செலுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ அதைல்லாம் தவறு என்பது தான் எங்கள் கருத்து, தவறு நடந்திருந்தால் அமலாக்கத்துறை சோதனை செய்யலாம், தவறே இல்லையென்றால் உங்களுக்கு எதிராக இருக்கும் அரசு என்பதற்காக மிரட்டும் தோணியில் சோதனை என்பது தேவையில்லாது., என பேட்டியளித்தார்.,