காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 02ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு பால்காவடி, அலகு காவடி, மயில் காவடி எடுத்து வீதியுலாவாக வந்து தீக்குழியில் இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.

தீமிதி திருவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.என்.திருமுருகன், விக்னேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ஓமலிங்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.





