மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமான அருள்மிகு சித்திர ரத வல்லவபெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மற்றும் மகா யாக பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது.

வருகின்ற 26 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வதை ஒட்டி லட்சார்ச்சனை தொடங்கியது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மற்றும் 12 ராசிகளுக்கு உரிய நட்சத்திரங்களை சொல்லி பக்தர்கள் லட்சார்ச்ணையில் வேண்டிக் கொண்டனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மூன்றாம் நான்காம், ஐந்தாம் கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது திங்கள்கிழமை அன்று லட்சார்ச்சனை நிறைவு பெரும் செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை மகா சங்கல்பம் மகா யாகம் நடைபெறும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருமஞ்சனம் மகா அரத்தி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் கார்த்திகை செல்வி ஆய்வாளர் சாவித்திரி தக்கார் மாலதி உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர் காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்





