• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம்..,

ByK Kaliraj

May 23, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சாத்தூர் எம்எல்ஏ கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையாளர் சம்பத் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வெம்பக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெய பாண்டியன், கிருஷ்ணகுமார், மற்றும் கிராம ஊராட்சிகள் மகேஸ்வரி ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர் அதில் சாத்தூர் எம்எல்ஏ கடற்கரைராஜ் பேசியது

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வாறுகால் வசதி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் கிராமங்களில் தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படை வசதிகள் சாலை வசதிகள் குறித்து எனக்கு தெரியப்படுத்தினால் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க எடுப்பதாக உறுதியளித்தார்.

விரைவில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வர இருப்பதாகவும் அதில் மக்கள் தேவையான கோரிக்கைகளை தெரிவித்தால் அதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து ஊராட்சி செயலாளர்கள் தங்களை எம்எல்ஏ கடற்கரை ராஜிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.