மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவமனை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மூலம் எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு இன்று காலை 11 மணியளவில் வருகை தந்த கருப்பையா எம்எல்ஏ அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து ஆய்வு மேற் ொண்டார் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் ஊராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் குறித்த விவரங்கள் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சரி செய்ய அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மின்சார துறை அதிகாரிகள் ஆகியோர்களை வரவழைத்து மேலக் கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின்கடைகளை சரி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டார் மேலக் காலில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்தவாறு உயர் அதிகாரிகளிடம் பேசி துரித நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டார் தொடர்ந்து ஊராட்சி அலுவலகம் அருகில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் அமர்ந்து மேலக்கால் ஊராட்சி உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார் பொதுமக்களின் குறைகளை அங்கிருந்து வாரே செல்போன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற கருப்பையா எம்எல்ஏ அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியாளர்கள் செவிலியர்கள் உள்ளிட்டவர்களிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து விவரங்கள் கேட்டறிந்தார் மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை பற்றியும் கேட்டறிந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் பிரசவார்டில் இருந்த குழந்தை மற்றும் தாய்மாருக்கு பரிசு பொருள் வழங்கி மருத்துவமனையில் செய்யப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என கூறினார்.
அங்கிருந்த தாய்மார்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறினார்கள் பின்னர் மருத்துவமனை வெளிப்பகுதியில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவமனை அருகில் செய்யப்பட வேண்டிய கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரியிடம் கலந்து பேசினார் விரைவில் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அங்கிருந்தவர்களிடம் உறுதி அளித்தார் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் வரவேற்பு கொடுத்தனர் அங்கும் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மேலக்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பணிகளை மேற்கொண்ட எம் வி கருப்பையா எம்எல்ஏ அவர்களை பொதுமக்கள் மற்றும் எம் எல் ஏ விடம் கோரிக்கைகள் வழங்குவதற்காக வந்திருந்த அனைவரும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் வழக்கறிஞர் தியாகு தாமு சரவணன் மேலக் கால் மணி ஊராட்சி செயலாளர் விக்னேஷ் கிராமத் தலைவர் முத்துக்குட்டி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மின்சார துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற பணியாளர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் மேலக்கால் கச்சிராயிருப்பு பொட்டல்பட்டி கீழ மட்டையான் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.





