கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே ஒரு கிராமத்தில் இரண்டு பேர் சாராயம் காய்ச்சுவதாக கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது இரண்டு பேர் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். வடுகபாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், செங்காளியப்பன் என்பது தெரிய வந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கேன்களில் அடைத்து வைத்து இருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.




