• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 2 நூல்கள் வெளியீட்டு விழா..,

Byமுகமதி

May 18, 2026

பட்டுக்கோட்டையில் ஆசிரியர் ந.செல்வம் எழுதிய மாற்றி யோசிப்பது எப்படி? (வாழ்வை மேம்படுத்த), வி’வேகமாக’ வாசிப்பது எப்படி? (வாசிப்பை வசப்படுத்து) என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இயல்வாணர் கவிஞர்.கோட்டை அம்பிதாசன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் மாறன் வரவேற்புரை ஆற்றினார்.

முன்னதாக கலைமணி செல்வி தேவிப்ரியா முனுசாமி அவர்களின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பதி திருஞானம் அறக்கட்டளைத் தலைவர் பொன்.திருப்பதி முன்னிலை வகித்தார்.

எழுத்தாளர் முனைவர் சோம.வள்ளியப்பன் நூலை வெளியிட இராஜேந்திரன் நூலை பெற்றுக் கொண்டார்.

தமிழறிஞர் ஆசிரியர் அ.த.பன்னீர்செல்வம், முனைவர், சௌ.இராமகிருஷ்ணன் பைந்தமிழ்ப் பாவலர் சி.துரைமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியர் ஆசிரியர் ந.செல்வம் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்

சண்முகப்பிரியா நன்றி கூறினார். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலந்து கொண்டனர்.