• Tue. May 19th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் கருப்பையா எம்.எல்.ஏ., கிணற்றில் ஜலப்பிரதட்சம் செய்து வேண்டுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். வீ கருப்பையா சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேண்டும் என்றும் விஜய் தமிழக முதல்வராக வர வேண்டும் என்றும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு தமிழக வெற்றி கழகம் தேர்தலில் 108 இடங்கள் பெற்று சாதனை படைத்தது விஜய்யும் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த வேண்டுதலை நிறைவேற்றித் தந்த ஜெனகை மாரியம்மனுக்கு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வாக்கு எண்னும் மையத்தில் இருந்து வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டு இரவு 9 மணிக்கு வெளியே வந்த எம்.வீ.கருப்பையா சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளு டன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.

அதன் பின் நேற்று கெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு தனது வேண்டுதலான ஜல பிரதட்சணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி காலை 11.30மணிக்கு சோழவந்தான் நகரி சாலையில் ஆலங்கொட்டாரத்தில் உள்ள ஒரு கிணற்றில் இறங்கி தமிழக வெற்றிக் கழக கொடியுடன் மிதந்தபடி ஜல பிரதட்சனம் செய்தார்.

அப்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் டி.வி.கே வாழ்க, தமிழக முதல்வர் விஜய் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழக்கறி ஞர் தியாகராஜன்,தமிழன் தாமு, சரவண கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, பாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.