மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பாவலர் சி.சூர்யா அவர்களின் அரசியல் அழுக்குகள் மற்றும் காதலென்னும் பெரும் புரட்சி கவிதை நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்புரை வழங்கினார்
பாரதிதாசன் அகாடமி செயலாளர்&இளைஞர்களின் வெற்றிப் பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றினார் முதல் பரிசு 10,000 ரூபாய் தொகை சான்றிதழை மாணவி துர்கா,இரண்டாம் பரிசு 7000 ரூபாய் தொகை சான்றிதழை மாணவி கார்னிகா,மூன்றாம் பரிசு 2500 ரூபாய் தொகை சான்றிதழை மாணவர் தீரேந்திரன் ,மாணவி தேன்மொழி 2500 ரூபாய் தொகை சான்றிதழை ஆகியோர் பெற்றார்கள்.
சிறப்புப்பரிசு மாணவி சந்தோஷிகா,மாணவி சரவண பவதாரணி,மாணவர் ராஜாராம்,மாணவர் கார்த்திக்கேயன் ஆகியோர் தலா 1000 ரூபாய் தொகை,சான்றிதழை பெற்றார்கள். பங்குபெற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்,புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாவலர் சி.சூர்யா அவர்கள் எழுதிய அரசியல் அழுக்குகள் கவிதை நூலை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செ.கர்ணன் வெளியீட்டார் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளர் கனகராஜ் நூலை பெற்றுக்கொண்டார்.
காதலென்னும் பெரும் புரட்சி கவிதை நூலை சமூக செயற்பாட்டாளர் கல்லணை சுந்தரம் வெளியீட்டார் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார் நூலை பெற்றுக்கொண்டார்.
பின்பு வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆற்றல் அறக்கட்டளை ரபீக் ராஜா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றார்கள்.
பாரதிதாசன் அகாடமி சந்தோஷ் நன்றி கூறினார்.
இப்போட்டியில் மாணவ,மாணவியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.




