• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி..,

BySeenu

May 17, 2026

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது.

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி புரூக்ஃபீல்ட் மாலில் தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி C.V. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், இணை மருத்துவக் கல்லூரியின் (SRHIAHS) முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக் கல்லூரி (SRHIAHS) மாணவர்கள் உருவாக்கிய நேரடி செயல் மாதிரிகள் அளவறியான் ஈர்த்தன. மேலும் சுவாசம் மற்றும் செரிமானம் தொடர்பான சிக்கலான மருத்துவக் கருத்துகளைச் சாமான்ய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நுரையீரல் பாதிப்பு மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் குறித்து மாணவர்களும் மருத்துவர்களும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.