மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி க்கழக வேட்பாளராக எம். வீ கருப்பை யா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 63,907 வாக்குகள் பெற்று 2678வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2011 ஆண்டு சட்டமன்ற உறுப்பிராகஇருந்து அவை நடவடிக்கைகளில் முன் அனுபவம் பெற்றவர் என்பதால் தமிழக ஆளுநரால் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுபதவி ஏற்றார்.

அதன் பின் முதலமைச்சர், அமைச் சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களுக்கும், சபாநாயகருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அதன் பின் 108இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க 118இடங்கள் தேவைப்பட்டது அதனால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தி.மு.க ஆதரவு கட்சிகள் ஆதரவு தெரிவித்த பின்னும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .அதில் அ.தி.மு.க. வை சேர்ந்த ஒரு பிரிவினரும்ஆதரவு தெரிவித்ததால் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக் கநம்பிக்கை வாக்கெடுப்பில் 144 பேரின் ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றது.

இதில் அ.தி.மு.கவில் எம். வீ கருப்பையாவுக்கு சோழவந்தான் தொகுதியில் நிற்க வாய்ப்பு வழங் காத பொதுச் செயலாளர் பழனிச் சாமி,எஸ் பி வேலுமணி சி.வி சண்மு கம் ஆகியோர் தனித்தனியாக தற்கா லிக சபாநாயகர் கருப்பையாவிடம் மனு கொடுத்து சம்பவம் ஆச்சரி யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சட்டமன்றம் தற்போது தற்காலிக மாகதேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.அதனால் நேற்று எம். வீ. கருப்பையாசொந்த ஊரான அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிட மருதூரில்உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.முன்னதாக மாலை 5 மணிக்குவாடிப்பட்டி காவல் நிலையம் முன்பு உள்ள கிரட் வளாக தேர்தல் அலுவலகத்தில் இருந்துஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.அதன் பின் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சமயநல்லூர் அக்னி வீரபத்திர சாமிகோவிலிலும் அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள்மாவட்டச் செயலாளர் விஷால் கிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு, பேரூர் செயலாளர் பசுமணியன் வழக்கறிஞர்கள் தியாகராஜன் அழகேசன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் அவருக்குதாரை தப்பட்டை முழுங்க சால்வைகள் அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.





