விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

அதன் படி கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல்கள், 3 தற்காலிக உண்டியல்கள் மற்றும் ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் எண்ணும் பணி நடைபெற்றது.
காணிக்கை பொருட்கள் எண்ணப்பட்டதில் ரூ. 37,44,983 ரொக்கப்பணமும், தங்கம் 10 கிராம், மற்றும் வெள்ளி 495 கிராமும் கிடைக்கப்பெற்றது. விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையாளர் இளங்கோவன் , பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, ஆகியோர் முன்னிலையில் காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன.

உண்டியல் இருந்த காணிக்கைகளை கணக்கிடும் பணியில் மதுரை அருப்புக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்பட்டி மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆன்மீக சேவா குழுவினர் மற்றும் பொதுமக்கள் , கோவில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோவில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற காணிக்கை எண்ணும் பணி கோவில் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது .




