• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷ பூஜை..,

ByM.I.MOHAMMED FAROOK

May 15, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.