• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா..,

Byமுகமதி

May 13, 2026

உலக செவிலியர் அமைப்பு நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரண்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12- ஆம் நாளை நினைவு கூறவும் செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகாரம் செய்யவும் மே 12 ஆம் தேதியை உலகமெங்கும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே .எச் .சலீம் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சிகிச்சை மருத்துவர் டாக்டர் சு.அனிதா தனசேகரன், மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பாசல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் . இவ்விழாவில் செவிலியர்களின் அர்ப்பணிப்பு, முக்கியத்துவம், திறன் மேம்பாடு பற்றி பேசப்பட்டது.

இவ்விழாவில் மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் தர்மராஜ், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். செவிலியர் அனைவரும் கௌரவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. சர்வதேச செவிலியர் தின விழாவினை மருத்துவமனை செவிலியர் மேற்பார்வையாளர் திருமதி சௌந்தர்யா மற்றும் மனிதவளம் மேலாளர் செல்வி.செல்சியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவின் இறுதியில் துணை மேலாளர் விக்னேஷ் நன்றியுரை ஆற்றினார்.