• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மழை நீருடன் கழிவு நீர் குளம்..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வாயிலில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது,. விருதுநகர் நகர் முழுவதும் சாக்கடை கால்வாய்கள் திறந்த வெளியிலும், சிறு மழை பெய்தால் கூடதெருக்களில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பெண்மணி ஒருவர் கூறுகையில் கழிவு நீர் குறித்து நகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை, மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்த பின்பும் கூட நகராட்சி அதிகாரிகள், செல்படாமல் இருக்கிறார்கள் என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிட முடியும் என்று கூறினார். த வெ க தொண்டர் ஒருவர் கூறுகையில் இது வரை இருந்த ஆட்சி வேறு, இன்று ஆட்சி வேறு, நகராட்சி அதிகாரிகள் இனியும் திருந்தவில்லை என்றால் முதல்வர் விஜய் திருந்த வைப்பார் என்றார்.

சுகாதார பிரச்னை என்றால் உடனடி நடவடிக்கை என்று அறிக்கை விடுத்துள்ள தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்கள் என்று நாமும் பொருத்திருந்து கவனிப்போம்.