• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பூப்பல்லாக்கில் ஊர் திரும்பிய முருகப்பெருமான் தெய்வானை..,

ByKalamegam Viswanathan

May 3, 2026

மாமதுரையில் பெற்றோர்களான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்றமுருகப்பெருமான் தெய்வானை அம்பாளுடன் பூப்பல்லாக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைநடத்தி வைத்த பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடத்திற்கு மழையோடு வந்து சேர்ந்தார்.

புராண வரலாறு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில்15 நாட்கள் பங்குனி பெருவிழாவெகு விமர்ச்சியாககொண்டாடப்படும். திருவிழாவின் 13-வது நாள்முருகப்பெருமான் தெய்வானை அம்பாளுக்குதிருக்கல்யாணம் வைபோகம் கோலாகலமாக நடைபெறும். இந்த நாளில்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன்சுந்தரேசுவரரும், மீனாட்சிஅம்மனும் புறப்பட்டு வந்து முருகப்பெருமான் தெய்வானைஅம்பாளின் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள் இதே போல ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்க கூடிய சித்திரை திருவிழாவில் மீனாட்சிஅம்மன்,சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காகதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.

இதே நாளில் தெய்வானை அம்பாளுடன் முருகப்பெருமான் தனது பெற்றோர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளுவதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்பட்டு வருவார்கள். இத்தகையபுராண வரலாற்று சிறப்பு காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது பெற்றோர்கள் திருமணத்திற்கு பங்கேற்றனர்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அன்றுமீனாட்சியம்மன்,சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வைபோகம்கோலகாலமாக நடந்தது. இதனையொட்டி கடந்த 27-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குதிருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாளும்,சுப்பிரமணியசாமி தெய்வானை அம்பாளும் புறப்பட்டு வந்தனர். மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பவளக் கனிவாய்பெருமாள் நடத்தி வைத்தார். தெய்வானை அம்பாளுடன்சுப்பிரமணியசுவாமி தனது பெற்றோர்களின் திருமணத்தில் கலந்து கொண்டுபக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில்தெய்வானை அம்பாளுடன்சுப்பிரமணிய சுவாமியும்,பவளக்கனிவாய் பெருமாளும் கடந்த 4 நாட்கள் மதுரையில் தங்கி இருந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தனர் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று (2-ந் தேதி) மாலையில் வாசனை கமழும் வண்ண மலர்களானபூ பல்லக்கில் தெய்வானை அம்பாளுடன் முருகப்பெருமானும், பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும்மேள தாளங்கள்முழங்க புறப்பட்டு வந்தனர்.வரும் வழி நெடுக ஆங்காங்கே திருக்கண் அமைத்துமுருகப்பெருமானை வரவேற்று பக்தர்கள்தரிசனம் செய்தனர். இந்த நிலையில் தெய்வானைஅம்பாளுடன் முருகப் பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடமானதிருப்பரங்குன்றம் கோவிலுக்கு மழையோடுவந்து சேர்ந்தனர் இந்த நிலையிலும் அங்கு அதிர் வேட்டு முழங்க சுவாமி அம்பாளை பக்தர்கள்வரவேற்றனர். இதனையடுத்துசுவாமி அம்பாளுக்கு தீப தூப, ஆராதனை நடந்தது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.