• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தோழர் எம்.ஆர்.முத்துசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.பெரியசாமி, ஏ.சவடமுத்து, பி.செல்வம், ஏ.ராகேஷ், ஏ.முத்துக்குமார், எஸ்.மாரிமுத்து, என்.காமலட்சுமி, கிளைச் செயலாளர்கள் எஸ். முருகேசன், ஆர்.அசோக்குமார், ரகு, என்.பாண்டிதுரை, என்.நாகமுத்து, ரங்கசாமி மற்றும் சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் தனசாமி, பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதே போல ஆத்துமேடு, கோவிலூர், வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள சுமைப்பணி தொழிலாளர் சங்க அலுவலகம், புதுரோடு, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி விவசாயிகள் சங்க அலுவலகம் உள்ளிட்ட பல ஊர்களில் கொடியேற்றப்பட்டது.

இதே போல ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் முருகேசன் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவமணி, சுமதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலு, நாகேஸ்வரன், கிளை செயலாளர்கள் பூபதி, முருகன் குமரகுரு, சின்னதுரை, மகேந்திரன் மற்றும் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வீரலப்பட்டி வேலூரில் தேவராஜ் கொடியேற்றி வைத்தார்.