• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பாஜக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி..,

ByM.I.MOHAMMED FAROOK

Apr 29, 2026

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவின் மேல் விவாதம் நடைபெற்று; ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது இதற்கு எதிராக வாக்களித்த திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கிண்டி கூட்டணி கட்சிகளை கண்டித்து திருநள்ளாறு தொகுதியில் பாஜக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினரும் திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான ஜி என் எஸ் ராஜசேகரன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணியில் ஏராளமான பாஜகவினர் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.