• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பழனியில் குவிந்த அரசியல் தலைவர்கள் கோயிலில் பரபரப்பு…

ByS.Ariyanayagam

Apr 29, 2026

பழனி மலை கோயிலில் குவிந்த அரசியல் தலைவர்களால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் பழனி கோயிலில் படையெடுத்த வண்ணம் உள்ளனர். பழனி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இந்த பிரசாதம் முதல்வர் மனைவியை துர்கா ஸ்டாலின் இடம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்பு பழனியில் அரசியல் தலைவர்கள் சங்கமம் அதிகமாகியது.

எடப்பாடி பழனிசாமி மனைவி மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆர். பி.உதயகுமார் உட்பட பலர் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பின்பு தவெக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் என ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்யக் குவிந்த வண்ணம் உள்ளனர்.