• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சௌர்ணமுத்து மாரியம்மன் கோவிலின் சித்திரை உற்சவ திருவிழா…

ByP.Thangapandi

Apr 28, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சௌர்ணமுத்து புதுமாரியம்மன் திருக்கோவில்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்சவ பெருவிழா ஐந்து நாள் திருவிழாவாக வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டும் கடந்த 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், 2 அக்னிச் சட்டி, 21 அக்னிச் சட்டி, 101 அக்னிச்சட்டி என எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியது பலரையும் பக்தியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து சிம்ம வாகனத்தில் எழுந்தளிய சௌர்ணமுத்து மாரியம்மனை
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.