• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தமிழகத்தில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் -ஐ.பெரியசாமி உறுதி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை தொடர்ந்து செய்து வருகிறார்.

தினசரி அமைச்சரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு கண்ட ஆத்தூர் தொகுதி மக்கள் தற்போது தேர்தல் காலம் என்பதால் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை கொடுக்கமுடியாமல் தவித்து வந்தனர். நேற்று காலை 10 மணியளவில் ஆத்தூர் தொகுதிக்கு வந்த பொதுமக்கள் மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகள் கேட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு கண்டனர்.

அதனைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கோவில் விழாக்கள் மற்றும் தனது இல்ல விழாக்களுக்கான அழைப்பிதழ்களை வழங்கி அமைச்சரிடம் ஆசி பெற்றுச் சென்றனர். அப்போது ஆத்தூர் தொகுதி மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பெரியசாமி அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் பெண்கள் நலனுக்கான செயல்படுத்திய திட்டங்கள் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலனுக்கான செயல்படுத்திய திட்டங்கள் தமிழகத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். கழகத்தலைவர் திராவிட மாடல் ஆட்சி நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 2.0 திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும், இது உறுதி என்றார். நிகழ்ச்சியின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அமைச்சரின் உதவியாளர் வத்தலகுண்டு ஹரிஹரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முபாரக் மந்திரி, மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, ஒன்றிய செயலாளர்கள் ப.க.சிவகுருசாமி, எம்.இன்பராஜ், ரெட்டியார்சத்திரம் மணி, ஒன்றிய துணை செயலாளர் மாங்கரை திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் அக்பர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், அருண்ஜெகநாதன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வி காங்யேகன், சுமதி கணேசன், நாகலட்சுமி ரமேஷ், காளீஸ்வரி மலைச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஸ், 7வது வார்டு திமுக நிர்வாகிகள் நரசிங்கம், வீரபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.