• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூ கட்டணம் கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு நிர்வாகம்??

ByKalamegam Viswanathan

Apr 26, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை த.நா.59 சிறுகுடியில் இருந்து மேலூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தில் கொண்டு சென்றுள்ளார்.

அவரிடம் இருந்த அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளார் நடத்துனர் இதை கேட்டதற்கு நக்கலாகவும் பதில் கூறியுள்ளார்.
10 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு மட்டுமே 13 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் பொழுது தொடர்ச்சியாக மல்லிகைப்பூ விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்,பெண்களிடம் 13 ரூபாய் கட்டணம் வசூலிப்பது தொடர் கதையாக உள்ளது.

இதனால் விவசாயிகள் பாதிப்படைகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கின்றோம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய மல்லிகை பூவை விற்பனைக்கு கொண்டு செல்லும் பொழுது 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை விவசாயிகள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்!

இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்!!
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல பொது மேலாளர் இடம் விளக்கம் கேட்டது சார் வணக்கம்

சார் வணக்கம் சொல்லுங்கள் என்று ஆரம்பித்தார்.
கேள்வி.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே நகரப் பேருந்தில் அரை கிலோ பூவிற்கு 13 ரூபாய் லக்கேஜ் வாங்கியதாக புகார் வந்துள்ளது அதற்கு குறித்து நடவடிக்கை என்ன என்று கேட்டோம்
பதில்… ஆம் சார் நான் கேள்விப்பட்டேன் அது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன். மேலும் நானே நேரடியாக அவரிடம் தொலைபேசியில் பேசி தங்களுக்கு 16 ஆண்டு காலம் அனுபவம் உள்ளதே ஏன் இந்த மாதிரி செய்தீர்கள் என்று கேட்டதற்கு தெரியாமல் செய்து விட்டேன் என்று அவர் பதில் அளித்தார் எனினும் அவர் மீது மெமோ கொடுக்கப்பட்டு விசாரணை குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபரையும் நேரடியாக வரவழைத்து விசாரணை செய்து அவர் மீது தற்பொழுது நடவடிக்கை எடுக்க மெமோ கொடுத்து உள்ளேன் என தெரிவித்தார்.
கேள்வி சார் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கேள்வி எழுப்பினோம்.

புதுமை லாரியின் பதில்..
இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்டு தவறு இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இது போன்ற எவ்வித தவறும் நடக்காத அளவுக்கு அனைத்து நடத்துனர்களுக்கும் அறிவுரையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்