• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சிக்கனம்பட்டியில் குடி தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள்..,

சின்னாளபட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி வெள்ளையகவுண்டர் தெற்கு தெரு முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தங்கள் பகுதிக்கு தனி கேட்வால் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதோடு மின் மோட்டார் வைத்து குடி தண்ணீரை உறிஞ்சுவதாக புகார் செய்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட சிக்கனம்பட்டி 1-வது வார்டில் போரைய கவுண்டர் தெரு, காளியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, வெள்ளையகவுண்டர்; தெற்கு தெரு என பல பகுதிகள் உள்ளன. இதில் ஒரே கேட்வால்வில் அனைத்து பகுதிகளுக்கும், குடி தண்ணீர் செல்வதால் மேடு பகுதியான வெள்ளையகவுண்டர் தெருவில் நான்கு குறுக்குதெருவில் குடியிருப்பவர்களுக்கும் குடி தண்ணீர் முறையாக செல்வதில்லை.

மேலும், பலர் மின் மோட்டார் போட்டு குடி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் வெள்ளையகவுண்டர் தெரு பகுதிக்கு கம்பரஸரில் தண்ணீர் வருவதுபோல் குடி தண்ணீர் வருகிறது. பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தங்கள் பகுதிக்கு தனி கேட்வால் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்தும், பேரூராட்சி நிர்வாகம் இது நாள் வரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தண்ணீர் திறந்துவிடும் நபர் தண்ணீரை திறந்துவிட்டு வெளி வேலைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவது அதிகரித்து வருகிறது. தங்கள் பகுதிக்கு தனி கேட்வால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பாக இப்பகுதியில் 50 குடி தண்ணீர் குழாய் இணைப்புகள் மட்டும் இருந்தது.

தற்போது 150-க்கும் மேற்பட்ட இணைப்புகளும் விரிவாக்கப் பகுதிகளுக்கு குடி தண்ணீரும் செல்கிறது. இதனால், எங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை. 6 நாட்களுக்கு ஒரு முறை 40 நிமிடம்தான் தண்ணீர் விடுகிறார்கள். மிகவும் சிரமப்படுகின்றோம் என்றார். அப்பகுதியைச் சேர்ந்த மகேஸ்மணி கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடி தண்ணீர் முறையாக வருவது கிடையாது, எங்கள் பகுதியில் குடி தண்ணீர் இணைப்பை அதிகம் கொடுத்துள்ளனர்.

அதற்கான கேட்வால்வுகளை வைக்கவில்லை. மேலும் பலர் மின் மோட்டார் வைத்து குடி தண்ணீர் எடுக்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும். எங்கள் பகுதிக்கு தனி கேட்வால்வு அமைத்துக்கொடுத்து குடி தண்ணீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.