• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஓட்டு பதிவு..,

ByS.Ariyanayagam

Apr 23, 2026

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது வாழ்க்கை பதிவு செய்தார்.

வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்
தனது வாக்கை பதிவு செய்தார்-நிச்சயமாக தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கே எடப்பாடியார் தலைமையிலே நல்லாட்சி அமையும்-நத்தம் இரா. விசுவநாதன்

தமிழக முழுவதும் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி வேம்பார்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தனது ஜனநாயக கடமையான வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் இரா. விஸ்வநாதன் பேசியதாவது:

நிச்சயமாக தமிழகத்திலே ஒரு நல்லாட்சியை அமைப்போம். மக்கள் எடப்பாடியார் தலைமையிலே ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். ஆட்சி மாற்றம் அமைய வேண்டும் என்று இந்த தேர்தலிலே தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள்.

கேள்வி:அதிமுகவுக்கு எப்படி இருக்கும்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாங்க தேர்தல் பிரச்சாரத்தில் சுத்தி வந்தபோது பார்த்தோம். வெற்றி மக்கள் ஆதரவு வெளிப்படையாக தெரிந்தது.

நிச்சயமாக தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கே எடப்பாடியார் தலைமையிலே நல்லாட்சி அமையும்.

கேள்வி:தென் மாவட்டங்கள்ல அவங்க வாங்கக்கூடிய வாக்குகள் வந்து நம்ம கட்சி இது

ஒரு அனுமானம் தானே. தேர்தல் முடிஞ்ச பிறகு சொல்லுங்க. தேர்தல் முடிஞ்சு ரிசல்ட்டை பார்த்து சொல்லுங்க.

தென் மாவட்டம் தென் மாநிலம் தென் மாவட்டம் இல்ல. தென் மாவட்டம் வட மாவட்டம் எல்லா ஒட்டுமொத்த தமிழகமும் ஜெயிக்கும்.

இன்னைக்கு இந்த ஆட்சி மாற்றம் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.
அதுல எந்த மாற்றமும் இல்லை. நிச்சயமாக அது நம்ம எடப்பாடியார் தலைமையிலே நல்லாட்சி அமையும். என்றார்.