• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் சக்கரபாணி குடும்பத்தினருடன் வந்து ஓட்டு அளிப்பு..,

ByS.Ariyanayagam

Apr 23, 2026

அமைச்சர் சக்கரபாணி தனது குடும்பத்துடன் வந்து கள்ளிமந்தயத்தில் ஓட்டளித்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியின் திமுக வேட்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தனது குடும்பத்தினருடன் கள்ளிமந்தயத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் முதல் ஆளாக வந்து,ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பின்பு அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அனைவரும் வெயிலில் சிக்காமல் வந்து ஓட்டளிக்க வேண்டும். பல இடங்களில் நல்ல வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நம்பிக்கையோடு செயலாற்றுவோம். நல்லதே நடக்கும் என்றார்.