• Tue. Apr 30th, 2024

பனை வாழ்வியல் இயக்கம் பனை விதை நடவு…

கடையம் அருகே மடத்தூர் ஊராட்சியில் ஒரு ஏக்கரில் குறுங்காடு, பனை விதை நடவு பணி.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மடத்தூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் ஆகியவை இணைந்து பனை விதை நடவு மற்றும் ஒரு ஏக்கரில் குறுங்காடு அமைக்கும் பணியை ஏ.ஆர்.கல்லூரி பின்புறம் உள்ள வள்ளியம்மாள்புரம் தெற்குக்குளத்தில் நடத்தினர். மடத்தூர் ஊராட்சி தலைவர் முத்துச்செல்வி ரஞ்சித் தலைமை வகித்தார். பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.

குறுங்காடு அமைக்கும் பணி, பனை விதை நடவை கடையம் காவல் ஆய்வாளர் டி.ரகுராஜன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாரம்பரிய பனை உணவுப்பொருட்களான பனங்கிழங்கு, கருப்பட்டி காபி, கருப்பட்டி மிட்டாய், நுங்கு, தவுண் ஆகியவற்றை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.சுப்பிரமணியன் வழங்கினார். மாணவர்களிடையே குறுங்காடு அமைப்பதன் அவசியம் குறித்து வனக்காப்பாளர் ராஜேந்திரன் பேசினார்.

வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மற்றும் காவூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு ஆர்வத்துடன் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.இந்நிகழ்வில் பனை வாழ்வியல் இயக்க தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ஸ்டீபன் மெல்கி, வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் அருண்குமார ஜோதி, மடத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சக்திபிரேமா, ஆண்டாள் பாக்கியலட்சுமி, சண்முகப்பெருமாள், ஜெயஅரசன், கற்பகம், தன்னார்வலர்கள் ஜோதி, சேர்மன், சொரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பனைவாழ்வியல் இயக்க தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *