• Fri. Apr 26th, 2024

குட்டி நாயை பிட்புல் நாயிடமிருந்து காப்பாற்றிய பெண் டிரைவர்

Byகாயத்ரி

Dec 23, 2021

உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் முதன்மையாக உள்ள பிட்புல் நாயிடமிருந்து ஒரு பெண்ணையும் அவரது வளர்ப்பு நாயையும் காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்த லாரன்ரே என்ற இளம் பெண் ஒருவர் தனது வீடு வாசலுக்கு வந்த பிட்புல் என்ற நாய்யை நட்புடன் அணுகினார். அப்போது தனது வீட்டிற்குள்ளிருந்து வளர்ப்பு நாயான ஒரு குட்டி நாய் லாரன்ரேவின் அருகே சென்றது.

அந்த நாய் மீது திடீரென பாய்ந்து பிட்புல் நாய் கடிக்க முயன்றது. தனது குட்டி நாய்யை காப்பாற்றிய லாரன்ரேவையும் ஒரு கட்டத்தில் பிட்புல் கடிக்க முயன்றது. அவரது அபாயக்குரல் கேட்டு ஓடிவந்த அமேசான் நிறுவன டெலிவெரி வாகனப்பெண் டிரைவர் ஸ்டெபானி இருவரையும் பிட்புல் நாயிடமிருந்து காப்பாற்றினார். பிட்புல் நாய் என்பது உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் முதன்மையான ஒன்றாகும். மனிதர்களையோ, விலங்குகளையோ வாயில் கவ்வி விட்டால் அது சாகும் வரை இந்த பிட்புல் நாய்கள் விடாது.

2005 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை மட்டும் அமெரிக்காவில் இந்த பிட்புல் நாய்கள் 508 பேரை கடித்துள்ளன. இதில் 203 பேர் இறந்துள்ளனர். இந்த நாயிடமிருந்து இளம் பெண்ணையும், குட்டி நாய்யையும் காப்பாற்றிய பெண் ஓட்டுனருக்கு அமேசான் நிறுவனம் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *