திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல், திருமலைசாமிபுரம் மற்றும் நகர் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் எல்லோருக்கும் 10 ஆயிரம், 2 ஆயிரம் செக் நாளிலிருந்து கொடுக்கப் போகிறோம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் வீடு தேடி வந்து சேர்ந்திடும் என்று வாக்குறுதி அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வரப்பெற்றதை தொடர்ந்து

தேர்தல் நடத்தை விதிமுறைகளை திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் மீறியது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



