• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா..,

Byமுகமதி

Apr 18, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தலைமையில், இன்று வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வானது நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் கிராமிய கலைகளான தெம்மாங்கு பாடல், கும்மியாட்டம், ஒயிலாட்டம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேற்படி நிகழ்வில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், ஏம்பல் வருவாய் ஆய்வாளர் பைரவி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள், சுய உதவி குழுவினர், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் கவியரசன் எழுதிய பாடலை கிராம உதவியாளர் முருகேசன் அவர்கள் மிக அருமையாக பாடினார். அதனை பாராட்டி இருவருக்கும் வருவாய்க் கோட்டாட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.