• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,

ByS. SRIDHAR

Apr 18, 2026

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி தலைமை வகித்தார். திமுக தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி முன்னிலை வகித்தார்.திமுக நகரச்செயலாளர் அழகப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய
திமுக மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளர் டாக்டர்
அண்ணாமலை ரகுபதி திருமயம் தொகுதி மட்டுமல்ல புதுக்கோட்டை மாவட்டமே திமுகவின் கோட்டை என்பதை நாம் நடைபெற்ற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்றும், கழத்தில் இணைந்தவர்களின் உழைப்புக்கு உரிய நேரத்தில் அதற்கான அங்கீகாரம் வழங்கும் கட்சி திமுக தான் என்றும், மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளையும் மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி வழங்கினார்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலவயல் முரளி சுப்பையா,தகவல் தொழில் நுட்ப பிரிவு கருணாநிதி, சுரேஷ், அரவிந்த்,திமுக மூத்த முன்னோடிகள், நகர,கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நகர்ச்செயலாளர்கள், இளைஞரணி,மாணவரணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு என பலர் பங்கேற்றனர்.