• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்..,

ByKalamegam Viswanathan

Apr 18, 2026

இந்துமக்கள்கட்சி-தமிழகம் தென்மண்டலத்தலைவராக இருக்கும் திருப்பரங்குன்றம் தா.அன்பழகன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால தீயசக்தி திமுக ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டன.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றாமலும்,நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்தப்பட்டன.

டெங்கு கொசுவை போல் இந்து சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுக கூட்டத்தில் பேசப்பட்டன. இந்து அமைப்பினர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டன.

சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்ற தமிழகத்தில் சர்வாதிகார இந்துவிரோத திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்பதற்காக

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்துமக்கள்கட்சி சார்பில் முழுஆதரவு தெரிவித்து

தமிழகம் முழுவதும் தமிழ்திரு. அர்ஜுன்சம்பத்ஜி அவர்களும், இந்துமக்கள்கட்சியினரும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக இந்துமக்கள்கட்சி கட்சி கட்டுப்பாட்டை மீறியும்,கட்சிக்குள் குழப்பத்தையும்,களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், தான்தோன்றிதனமாக செயல்பட்ட இந்துமக்கள்கட்சி தென்மண்டல தலைவராக இருந்த திருப்பரங்குன்றம்

தா.அன்பழகன் தமிழ்.அர்ஜுன்சம்பத்ஜி அவர்களின் உத்தரவின் பேரில் இன்று ( 17-04-2026 )முதல் தா.அன்பழகன் அவர்கள் இந்துமக்கள்கட்சி பொருப்பில் இருந்தும்,கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பதையும்,

திருப்பரங்குன்றம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.ராஜன்செல்லப்பா அவர்களுக்கு ஆதரவாக தமிழ்திரு.அர்ஜுன்சம்பத் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பதையும் இந்த அறிக்கையின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

https://www.facebook.com/share/17sshFVuyw