• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

எனது சகோதரன் ஐ பி செந்தில்குமார் வெற்றி பெறச் செய்யுங்கள் உதயநிதி பேச்சு..,

ByS.Ariyanayagam

Apr 17, 2026

திண்டுக்கல் தொகுதியில் ஐ.பி செந்தில்குமார் ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
நான் நூறு சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு 101வது தொகுதியாக திண்டுக்கல் வந்துள்ளேன். இந்த தொகுதியில் போட்டியில் வேட்பாளர் பழனிகள் நல்ல சேவைகள் செய்துள்ளார். உங்களுக்கு சேவை செய்வதற்கு இங்கு வந்துள்ளார். கடந்த முறை திண்டுக்கல் சீனிவாசன் மிகக் குறைந்த ஓட்டில் தான் வெற்றி பெற்றுள்ளார். அதனால் இந்த முறை ஜம்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நமது தம்பி ஐ.பி.எஸ் .வெற்றி பெறுவார். என் உடன்பிறவா சகோதரர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது தொகுதியில் கூட பிரச்சாரம் செய்யாமல் இங்கு வந்துள்ளேன்.

இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சீனிவாசன், மதுரை சேர்ந்த செல்லூர் ராஜு ஆகியோர் ஒரு சயின்டிஸ்ட் மாதிரி. முதலில் அவர்கள் சொல்வது புரியாது. பின்பு வீட்டுக்குப் போய் யோசித்தால்தான் நமக்கு புரியும். திண்டுக்கல்லில் ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. ஐ .பி. செந்தில்குமார் வெற்றி பெற்றால் ஏராளமான திட்டங்களை நாங்கள் திண்டுக்கல்லுக்கு செல்வோம். பாஜகவுக்கு முரட்டு அடிமையாக எடப்பாடி விளங்குகிறார். இடையில் ஒரு படத்தை காண்பித்தார். அதில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் கும்பிட்டு விழுவதுபோல் இருந்தது. இது மாதிரி அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் எனக்கு அனுபவம் இல்லை என்று எடப்பாடி என்னை திட்டுகிறார்.

மே.4ம்தேதி, ஓட்டு பெட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் முதல் இடத்திற்கு வர வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் ஓட்டுக்களை அதிகளவு இட வேண்டும். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதை செய்வீர்களா. இவ்வாறு பொதுமக்களிடம் கேட்டார். இதற்கு கூட்டத்தினர் கூச்சலிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.