• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளரிடம் வேலை கேட்ட சிறுமி..,

ByS.Ariyanayagam

Apr 16, 2026

திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமாரிடம் சிறுமி ஒருவர் என் தாய்க்கு வேலை வேண்டும் என கேட்டார்.

திண்டுக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் திண்டுக்கல் ஆர் .வி நகர், அங்கு விலாஸ் இறக்கம், நத்தர்ஷா தெரு, ஜமால் முகமது தெரு, காந்திஜி புது ரோடு,மணிக்கூண்டு உட்பட்ட பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது
ஆர். வி. நகர் பகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம், அப்பகுதியில் உள்ள ஒரு பெண் குழந்தை நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனது அம்மாவிற்கு நர்ஸ் வேலை வாங்கித் தாருங்கள் என மழலைச் சொல்லில் வேட்பாளரிடம் கேட்டது அனைவரையும் மெய்சிலர்க்க வைத்தது. உடனே வேட்பாளர் நான் ஏற்பாடு செய்கிறேன் அம்மா என குழந்தையிடம் அன்பாக சொன்னார்.

இதைக் கேட்ட குழந்தை மகிழ்ச்சி அடைந்தது.
பின்பு செந்தில்குமார் பேசியதாவது: சிறுபான்மை மக்களின் மீது ஒரு தூசி கூட விழாமல் பாதுகாக்க கூடியவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அவர் மீண்டும் முதல்வரானால் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நான் கேட்டு நிவர்த்தி செய்வேன். இதற்காக எனது அலுவலகம் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி முதல் திறந்தே இருக்கும். மேலும் மகளிர் உரிமை தொகையை முதல்வர் ரூ‌. 2000 ஆக உயர்த்தி வழங்க இருக்கிறார்.

எல்லா பெண்களும் படித்து உயர் கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு முதல்வர் பெண்களுக்கு நலத்திட்டங்களை தீட்டி வருகிறார். முதல்வரின் கரத்தை வலுப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.