• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Apr 15, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
புதன்கிழமை மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இராஜபாளையம் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து பேசியதாவது; அரசினுடைய திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துக் கொண்டு போய் சேருங்கள். மகளிருக்கு கட்டமில்லா பேருந்து, மகளிர் மாதம் ரூ.900 சேமிக்கின்றனர். பள்ளியில் காலை உணவு திட்டம், கல்லூரிகளில் 14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பல பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறோம், மகளிர் சுய உதவி குழுவிற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். நான் முதல்வன் திட்டத்தில் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளோம்.10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஒரே மாதத்தில் அறிவித்து மடிக்கணினி வழங்கி உள்ளோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒரு ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறோம். இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுகவும், பாஜகவினரும் நிறுத்த பார்த்தார்கள். ஆனால் நமது முதல்வர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மூன்று மாதம் சேர்த்து கோடைகால சிறப்பு தொகை என ரூபாய் ஐந்தாயிரம் வங்கி கணக்கில் வரவு வைத்தார். அதேபோல் முதல்வர் வாக்குறுதி மீண்டும் நமது ஆட்சி அமைந்த உடன் மகளிருக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும், காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீடிக்கப்படும், கல்லூரி மாணவ மாணவிகள் உதவித்தொகை 1500 வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை 1200 இல் இருந்து 2000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். அதைவிட முக்கியமானது எட்டாயிரம் ரூபாய் அனைத்து குடும்பத்தார்களுக்கும் வழங்கப்படும்.2016ஆம் ஆண்டு மக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்கவில்லை.(படத்தை காண்பித்து)அவர் இப்படித்தான் முதல்வர் ஆனார்.

காலைப் பிடித்தது தப்பு கிடையாது, காலை வாரிவிட்டது தான் தப்பு, முதலில் ஜெயலலிதா கால், இரண்டாவது சசிகலா கால், தற்போது மோடி காலை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார், மோடியின் முரட்டு அடிமை பழனிச்சாமி, நமது முதல்வர் கூறுவது இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல். டெல்லியை ஓட ஓட விரட்டி நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். ஒன்றிய அரசு நமக்கு சரியான திட்டங்கள் தரவில்லை. வரவேண்டிய நிதியையும் சரியாக தரவில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்றிய, பாசிச, சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டிய நேரம். தலைவருடைய மகனாக கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன் தங்கபாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்கள் என பேசினார். நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.