• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்ப்பேன்- செந்தில்குமார் உறுதி..,

ByS.Ariyanayagam

Apr 15, 2026

மக்களின் அடிப்படை பிரச்சனைகளை என்னிடம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தெரிவிக்கலாம். இதற்காக தனி அலுவலகம் திறக்கப்படும் என திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ. பி செந்தில்குமார் கூறினார்.

திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமார் திண்டுக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ராக்கி கோட்டம், மல்லிகை நகர், கொத்தம்பட்டி, செல்ல மந்தாடி, சீலப்பாடி உட்பட பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் அனைவரும் எனக்கு ஓட்டளிக்க ஆர்வமாக உள்ளனர். நான் உங்களின் குறைகளை, அமைப்புகள், சங்கங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். என்னை நீங்கள் தேர்வு செய்தால் உங்கள் குறைகளை கேட்க தனி அலுவலகம் திறக்கப்படும். அதில் நானும் இருந்து உங்கள் குறைகளை கேட்பேன். நான் ஒருவேளை வேலை பளு காரணமாக வெளியே சென்று விட்டால் எனது உதவியாளர்கள் அங்கு இருப்பார்கள். அவர்கள் உங்கள் கோரிக்கைகளை என்னிடம் நேரடியாக வந்து சேர்ப்பார்கள்.

இதற்காக தனி அலுவலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். உங்களுக்காக பணி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மேலும் அரசின் திட்டங்கள் உங்களுக்கு செயல்படுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8000 கூப்பன் வழங்கப்படும். முதல்வரின் திறமான சிந்தனையால் மக்கள் ஒவ்வொருவரும் பயன்பெறும் திட்டங்களை அறிவித்துள்ளார். முதல்வரின் கரத்தை வலுப்படுத்த என்னை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு அவர் கூறினார். கூட்டணி கட்சியினர் வழிநெடுகளிலும் வரவேற்பு அளித்தனர்.