• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமிய மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி….

ByK Kaliraj

Apr 14, 2026

சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையம், KTR பாலம், மணிநகர், முஸ்லிம் நடுத்தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார. பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்த
கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் பட்டாசுகள் வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் முஸ்லிம் நடுத்தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பேசிய கே.டி.ராஜேந்திரன் பாலாஜி

நான் என்றைக்கு உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களில் ஒருவன். எனக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவை யாராலும் எவராலும் பிரிக்க முடியாது .

என்னைவிட உங்களை பாதுகாப்பவன் ஒருவன் வேண்டும் என்று சொன்னால் அது உங்கள் வீட்டினுடைய உங்களது சொந்த பிள்ளையாகத்தான் இருக்க முடியும் .அதற்குப் பின்பு பெறாத பிள்ளையாக நான் இருப்பேன்.

எங்கிருந்து யார் வந்தாலும் இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்று சொன்னால் தடுக்கின்ற பணியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி யாக நான் என்றைக்கும் இருப்பேன்.

என்னை நம்பி வாக்களியுங்கள் ஒரு காலமும் நூல் அளவு கூட உங்களுக்கு எதிரான திசையில் நான் செல்ல மாட்டேன் என்று உறுதியாக சொல்கிறேன்.

நான் எங்கு சென்றாலும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.

இஸ்லாமியருக்கு எதிரான நிலைப்பாடு எந்த காலத்திலும் என் இதயத்திலும் உள்ளத்திலும் எண்ணத்திலும் வரவே வராது.