• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திராவிட மாடல் அரசு என்றென்றும் இருக்கும் அர. சக்கரபாணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே.கே.நகர், சம்ஸ்தீன்காலனி, துல்கருனை சிக்கந்தர்நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், குறிஞ்சி நகர்,பழனி கவுண்டன்புதுர், சண்முகவேல்புரம், ஏ. பி. பி. நகர்,வ. உ.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சருமான ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் அமைச்சர்
அர. சக்கரபாணி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசுகையில், நகராட்சியில் ரூ. 22 கோடியில் கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட், ரூ.4 கோடியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் ரூ.7 மதிப்பீட்டில் 20 ஏக்கரில் குப்பை கிடங்கு, 14 கோடியில் நகரும் படிக்கட்டுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சாலைவசதி கழிவு நீர் வாய்க்கால், கிரிவலப்பாதை உள்ளிட்ட சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது.

சிறுபான்மை மக்களின் அரனாக திராவிட மாடல் அரசு என்றென்றும் இருக்கும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், மருத்துவ காப்பீடு10 லட்சமாக உயர்த்தபடும்,

திராவிடமாடல் அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பெருமிதப்படும் வகையில் உள்ளதாக உலக நாடுகள் பாராட்டுகின்றன. சாதனை திட்டங்கள் தொடர அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட துல்கருனை சிக்கந்தர்நகர் பகுதியில்
முஸ்லிம் பள்ளி ஜமாத்தர்களிடம் அமைச்சர் அர.சக்கரபாணி வாக்குகள் சேகரித்து பேசினார்.

உடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியன் சின்த்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.