விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆண்ணாமலை வெம்பக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப் போது அவர் பேசியதாவது:- சாத்தூரை முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு நயினார் நாகேந்திரன் இங்கு போட்டி யிடுகிறார்.

நேரடியாக மத்திய அரசுடன் தொடர்பு உள்ளவர். எப்படிப்பட்ட திட்டத்தை யும் அவர் இங்கு கொண்டு வருவார். திருநெல்வேலியில் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு சாதனைகள் புரிந்தவர் தொகுதி முன்னேற்றத்திற்காக அதிகம் பாடுபட்டவர் இப்போது சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அனைத்து இடத்திலும் திமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது.
அனைத்து இடத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். வெற்றிபெ றும். தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப் போம்.

கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 8 ஆயிரத்து 8 பேர் கொலை செய்யப் பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 80 பாலியல் வழக்குகள் பதி வாகி உள்ளன. 3 வயது குழந்தை முதல் 63 வயது மூதாட்டி வரை தி.மு.க. ஆட் சியில் யாரும் பாதுகாப்பாக இல்லை. 39,900 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் பெண் களை, குழந்தைகளை பாது காக்க முடியவில்லை.
|தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகள், கம்யூ னிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் குறைக்கப்பட் டுள்ளது. ஆனால் கட்சியில் போதுமான உறுப்பினரே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதிகம் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கரைந்து வருகிறது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கொடுத்த திமுக தான் காங்கிரசுக்கு அடிமையாக இருந்து வருகிறது
ஆட்சிக்கு வரும்போது ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என் றார்கள். 28 மாதங்களாக கொடுக்கவில்லை.
இருக்கன்குடி, விருதுநகரில் தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன .குற்றவாளிகள தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தி.மு.க. அரசு விவசாயத் திற்கு எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை.
எனவே விவசாயம் தெரிந்த விவசாயி எடப்பாடி பழனிசாமி. ஆட்சிக்கு வந்தால் இந்த பகுதி முன்னேற்றம் அடை யும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி னையை நயினார் நாகேந்திரன் தீர்த்து வைப்பார்.
கேரளாவுக்கு பலமுறை சென்றுள்ள ஸ்டாலின் அங்குள்ள முதல்வரிடம் செல்வவள்ளி அனைத்து திட்டத்தை செயல்படுத்த ஏதும் சொல்லவில்லை செண்பக வள்ளி அணைத்திட்டத்தை செயல்படுத்தினால் விருதுநகர் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்கள் வளம் பெறும்.
ஆனால் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை அமைச்சராக இருந்த காலத்தில் நயினார் நாகேந்திரன் ஆறு கோடி நிதி வழங்கி ஆலையை சீரமைத்துள்ளார். ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அமைச்சர்களும் 40 கோடியில் அடிக்கல் நாட்டியதோடு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
சிமெண்ட் ஆலை பிரச்சனையை பாஜக தீர்த்து வைக்கும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.என பேசினார்.
கூட்டத்தில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் பாரதிய ஜனதா கட்சி ராஜா பாண்டுரங்கன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆலங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு வேட்பாளர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.




