• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தும் சன்னி லியோன்

தமிழில் வடகறி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்அடுத்து தற்போது யுவன் இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார் சன்னி லியோன். இந்தபடத்தில் தான் நடனமாடிய ஒரு லுங்கி டான்ஸ் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது கொரோனா விழிப்புணர்வு குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருவதை வெளிப்படுத்தும் வகையில் சிறை கம்பிகளுக்குள் தான் சிக்கித்தவிப்பது போன்று ஒரு வீடியோவையும், இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் அதை போட்டுக்கொண்டால் கொண்டாட்டம் தான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது போன்று இன்னொரு வீடியோவும் வெளியிட்டிருக்கிறார்.