• Fri. Apr 26th, 2024

வேலன் திரைப்பட விழாவில் கொரோனா விதிமீறல் அரசு நடவடிக்கை எடுக்குமா?

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். 2021டிசம்பர் 31 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று(22.12.2021) தி.நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய்ஷாசுன் ஜெயின் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இது போன்ற நிகழ்வுகளில் திரைத்துறையினர், சினிமா செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களில்ஒருவர்கூட மாஸ்க் அணியவில்லை மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் கூட்டம் கூடவோ, கும்பலாக இருக்கவோ கூடாது என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது தமிழ்நாட்டில் முதல்வர் உள்ளிட்டு அரசு ஊழியர்கள் வரை மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா பரவுகிறது. இதையொட்டி, திரையரங்கு, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் என எல்லா இடத்திலும், கட்டுப்பாடுகள் விதித்து செயல்படுத்தி வருகிறது அரசு. இந்த நிலையில், இப்படி ஒரு விழாவை நடத்த எப்படி அனுமதித்தது?


தவிர, பொது இடங்களில் கூடுவோர், இரு தடுப்பூசிகள் போட்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள். திரையரங்குகளில், இது குறித்து பரிசோதிக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்வில் அப்படி ஒரு ஏற்பாடுசெய்யவில்லை.


தொற்றுகள் பரவும் அபாயம் இருந்தும் ஜெயின் கல்லூரி நிர்வாகம் எப்படி இப்படியோர் நிகழ்வுக்கு அனுமதித்தது?பல்வேறு விசயங்கள் குறித்து பொதுவெளியில் ஆலோசனைகள் சொல்பவர் நடிகர் பிரபு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஏராளமான வீடியோவெளியிட்டவர் நடிகர்சூரி.. இருவரும் முக கவசம் இன்றி இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


ஒரு திரைப்பட விழாவை ஆயிரக்கணக்கான மாணவிகளை கூட்டி வைத்து நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? கல்லுாரி வளாகங்கள் கல்வி போதிப்பதை கடந்து சினிமா நிகழ்ச்சிகளில் தங்கள் மாணவிகளை கலந்துகொள்ள வைப்பது மாணவிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்தாதா என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *