விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவினைக் கல்லூரியின் செயலர் செல்வராஜன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் . பாலமுருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பின்னர் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில், திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார்.

தொடர்ந்து விழாவில் பேசியது
ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகியவற்றைப் பட்டதாரி மாணவர்கள் பின்பற்ற வேண்டும். என்றும் தாயை விட ஆசிரியர்களே மாணவர்களின் உயர்விற்குத் தொண்டாற்றுபவர்கள் என்றும் பெற்றோர்களின் தியாகங்களை முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவ, மாணவியர்கள் நினைவில் வைத்துக இருக்க வேண்டும். என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் உயர்கல்வி படிக்க 28 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே செல்கின்றனர். என்றும் இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் உழைப்பு அவசியம் என்றும் மாணவர்களால் மிகப் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்றும் மாணவர்கள் நேர்மறையாகச் சிந்திக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சார்லி சாப்ளின், கல்கி, அப்துல்கலாம், சுந்தர் பிச்சை போன்ற சாதனை புரிந்தவர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்; அவர்களைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவு பற்றி மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால்தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வாழ முடியும் என்றும் கூறினார்.
இவ்விழாவில் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் இயக்குநர் வளர்மதி அவர்களும் கல்லூரியின் இணைச் செயலர் இராஜேஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இளநிலை மாணவர்கள் 597 பேரும் முதுநிலை மாணவர்கள் 86 பேரும் முதுநிலை வணிக நிர்வாகவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை மாணவர்கள் 56 பேரும் என மொத்தம் 739 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ மாணவியர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.




