• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஆலங்குடியில் உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்த அமைச்சர் மெய்ய நாதன்..,

ByS. SRIDHAR

Apr 7, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சிவ வி மெய்ய நாதன் குலவாய்ப்பட்டி தாமரைப்பட்டி முத்துப்பட்டினம் வல்லத்திரா கோட்டை மற்றும் ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் சென்று பொது மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

ஊர் மக்கள் முழுவதும் வரவேற்று ஆரத்தி எடுத்து தொகுதி வேட்பாளரை வரவேற்றனர் அவர் பேசுகையில், இந்த தொகுதியில் எல்லா விதமான அடிப்படை வசதிகளை திராவிட மாடல் அரசு செய்து கொடுத்துள்ளோம். ஆகையால் மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி அமைந்திட எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தொகுதி வேட்பாளர் இருகரம் கும்பிட்டு வாக்குகளை சேகரித்தார். நிகழ்வில் ஊர்மக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.