• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை..,

Byசோலைஆதி

Apr 7, 2026

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் மெயின் ரோட்டில் ராஜ்குமார் என்பவர் நேற்றைய முன்தினம் இரவு எப்பொழுதும் போல் கடையடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை கடை திறக்க வந்த பொழுது கடை பூட்டை உடைத்து சற்று கதவு திறந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த ராஜ்குமார்அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். என் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர் மற்றும் தடை அறிவியல் நிபுணர் கடைக்கு வந்து ஆய்வு செய்தனர். தடயங்களை சேகரித்தனர். இதில் கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் தங்கவேல் என்பவருடைய கடை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து காடுபட்டிபோலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசிதேடி வருகின்றனர். மெயின் ரோட்டில் உள்ள கடைகள் உடைத்து பணம் மற்றும் திருடு போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மெயின் ரோட்டில் கடைகள் திருடு போன கடையில் சிசிடிவி கேமரா மற்றும் டிஸ்க் எடுத்து சென்று உள்ளனர். மெயின் ரோட்டில் குடியிருப்பு உள்ள பகுதியில் கடைகளில் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.