• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

திருமயம் தொகுதியில் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல்..,

ByS. SRIDHAR

Apr 6, 2026

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பி கே வைரமுத்து போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர் பி கே வைரமுத்து திருமயம்ம் பேருந்து நிலையத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து திருமயம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமாலிடம் வேட்பாளர் பி கே வைரமுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வேட்பாளர் பி.கே.வைரமுத்து கூறுகையில் கொலை, கொள்ளை ,கற்பழிப்பு போதைப் பொருள் விற்பனை பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத ஊழலற்ற திமுக ஆட்சியை அகற்றி புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைத்து மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்களை மீண்டும் பொது மக்களுக்கு எடப்பாடியார் ஆட்சி அமைத்து மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து திருமயம் பேருந்து நிலையத்தில் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.