இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உள்ள 40நாட்களை தவக்காலமாக கிறிஸ்துவர்கள் அனுசரிக்கின்றனர். அந்த நாட்களில் கிறிஸ்துவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும்.

அவர் 3வது நாள் உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப் படும். அதன்படி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று கிறிஸ்துவமக்களால் அழைக்க ப்படும் சிறப்புமிக்க இயேசுவின் ஜுவநீருற்று அருமருந்து மூலம் பக்தர்களின் தீராதபிணிகளை தீர்த்து எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள் ளியையொட்டி புனிதவார சடங்குகள் வழிபாடுகள் 3நாட்கள் நடந்தது.

முதல்நாள் புனித வியாழன் மாலை 6மணிக்கு ஆண்டவர் இயேசுவின் கடைசி இரவு உணவு திருப்பலியில், பாதம் கழுவும் சடங்கும் தொடர்ந்து நள்ளிரவு 12மணி வரை நற்கருணைஆராதனையும் புனித வெள்ளியன்று காலை 7மணி முதல் மாலை 4மணிவரை நற்கருணை ஆராதனையும் சிறப்பு சிலுவைப்பாதைவழிபாடும் 6.00மணிக்கு புனிதவௌ;ளி திருச்சடங்குகளும். புனித சனியன்று இரவு 11மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு திருச்சடங்குகள் மற்றும் திருப்பலியும் 12மணிக்கு இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பு வழிபாடும் இந்தூர் அருள் தந்தை சுரேஷ் தலைமையில் நடந்தது.

திருச்சி மறை மாவட்ட தந்தை அம்பு ரோஸ் மறையுரையாற்றினார். இதில் முன்னாள் மறைமாநில தலைவர் சாந்துராஜா, திரு தொண்டர்கள் கிளஸ்டிக்கஸ்டோ டிட்டோ பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.5ந்தேதி ஞாயிற்றுகிழமை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஈஸ்டர் பெருவிழாவையொட்டி அதிகாலை 6.30மணிக்கும், காலை 11மணிக் கும், மாலை 5மணிக்கும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, கேரளா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 40நாட்கள் நோம்புகடைபிடித்தவர்கள் இங்கு தினமும் சிறப்பு பிராத்தனைகள் செய்து முடிகாணிக்கை செலுத்தினர்.

மதுரை, திண்டுக்கல், தேனிமாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக ஆலயத்திற்கு வந்தனர். இதன் ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை திருத்தல பங்குதந்தை ரமேஷ் அடிகளார், நிர்வாகதந்தை ஆண்டனி வினோஅடிகளார் மற்றும் பங்குஇறைமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சப்இன்ஸ்பெக் டர்கள் சிவகுமார் உள்பட போலீசார் செய்திருந்தனர்.



