பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன்.

நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த கேள்விக்கு: எல்லா இடத்திலும் நடக்காது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் தேர்தல் கமிஷனரிடம் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார் அவங்க நடவடிக்கை எடுப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது
திமுக தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு:
ஒருமுறை தேர்தல் வரும் போது இந்த மாதிரி அட்ராக்டிவ் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆனால் முழுமையாக நிறைவேற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஊழல் அதிகமாக செய்வதால் நான் எங்களின் தலைவர் போல் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் அரசியலுக்கு வரும் சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த முறை தெரியும், என்னென்ன செய்தார்கள் என்னென்ன செய்யவில்லை என்று. நான் என்ன சொல்லி வாக்கு சேகரிக்க போறேன் என்றால் கடந்த 70 வருடங்களாக நான்கு லட்சம் (sorry) ஐந்து லட்சம் கோடி கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 60 (sorry) 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 70 வருடங்களில் 5 லட்சம் கடன் ஐந்து வருடத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஒரு பாயிண்ட் போதும் நாட்டோட முன்னேற்றம் எந்த வகையில் உள்ளது என்று சொல்லி வாக்கு சேகரிக்க போறோம் அதனால் களம் எங்களுக்கு எளிமையாக இருக்க போகிறது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிக்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியதால் தான் நடிகர் விஜய் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

TN 2026 படம் தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கதைக்களம் இருப்பதாக பரவி வரும் கருத்து குறித்த கேள்விக்கு: சினிமா ஒரு கலை அதற்கு ஜாதி மதம் கிடையாது. தனிமனித தாக்குதல் அதில் இருக்கா என்பது முழுமையாக படம் வெளியே வந்தால் தான் தெரியும். நட்டியும் விஜய் சார் பிரண்டு தான் அதனால் தவறாக இருக்காது.
விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புவது குறித்த கேள்விக்கு: அனுமானத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் முழு படம் பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால் பார்த்து விட்டு சொல்லுங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் படம் வந்ததற்கு பிறகு நம் தலைவரையோ தமிழக வெற்றி கழகத்தையோ தவறாக பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா நடவடிக்கை எடுப்போம் தலைவர் சொன்னதைப் போல் டீசண்டா அப்ரோச் பண்ணுவோம் என்பது தான் என்னோட கருத்து.
பிரதான கட்சிகள் தங்களுக்குள் தான் போட்டியென மாறி மாறி சொல்வது குறித்த கேள்விக்கு: எல்லா கட்சியும் அவங்களை முன்னிலைப்படுத்தி தான் பேசுவார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்று தெரிய வேண்டும். எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டியான எங்கள் தலைவர் சொல்வதில் ஆணித்தனமான உண்மை உள்ளது.




